கோவை மார்ச் 22சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினர் நேற்று ஜோதி நகர் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சாவிற்பனைக்கு வைத்திருந்ததாக பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த முபாரக் மகன் சபரீஷ்வரன் (28) மற்றும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஹக்கீம் (35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது. 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பொள்ளாச்சியில் கஞ்சா கடத்தல் – 2 பேர் கைது..!
