கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன் குமார் நேற்று அங்குள்ள ராக்கிபாளையம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், ரூ . 3900 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி வந்த போத்தனூர் கலைஞர் நகரை சேர்ந்த முருகேஷ் ( வயது 51) அவரது மகன் முத்து (வயது 25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். துடியலூர் முத்து நகரை சேர்ந்த லோகநாதன் என்பவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.