திடீரென பெய்த மழையில் தேங்கிய குப்பைகள்- உடனடி நடவடிக்கை எடுத்த கோட்டூர் ஊராட்சி நிர்வாகம்..!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென கன மழை பெய்தது இதன் காரணமாக நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோ.புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேங்கியுள்ள குப்பை கூளங்கள் ஆங்காங்கே அடைத்தும் இருந்தது. இதனை அறிந்த, தனிஅலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரி,
கோட்டூர் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜ் ஆகியோர் தற்போது இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு காலங்கள் என்பதால், உடனடியாக குப்பைகளை அகற்றி சாக்கடைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் அனைவருக்கும் கிராம மக்களும் எஸ்டிபிஐ கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளாம் வெகுவாக பாராட்டி நன்றி கூறினர்.

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய கோட்டூர் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜ் கூறியதாவது;

கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

கோ.புதூர் கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக சில வேண்டுகோளும் கோரிக்கைகளையும் முன் வைக்கின்றோம்.

முக்கியமாக வீட்டு வரி செலுத்துவதில் புதூர் கிராம மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர் ஆகையால் விரைந்து அவரவர் வீட்டு வரியை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சாக்கடைகளில் குப்பைகள், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், ஆகியவை கொட்டப்படுவதாலேயே அடிக்கடி சாக்கடை அடைத்து கொள்கிறது ஆகையால் அவரவர் வீட்டு முன்பு சுத்தமான முறையில் வைத்து கொள்ள வேண்டும் எனவும், விழாக்காலங்களில் மின்கம்பங்களில் கட்டப்படும் ஒலி பெருக்கி போன்ற காரணங்களால் அடிக்கடி மின்சார விளக்கு பழுதடைந்த விடுகிறது இனி வரும் காலங்களில் அதையும் தவிர்த்து ஊராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.