வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து தீயில் கருகிய மூன்று குழந்தைகள் பலியான சோகம் – தாய் உயிர் ஊசல்..

செங்கல்பட்டு பெரிய மணியக்காரர் தெருவில் வசிப்பவர் சதாம் (28) பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் செங்கல்பட்டு ரயில்வே கேண்டினில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜி குத்துன் (28) இவர்களது மகள்கள் ரஜியா பர்வீன் (8) சயா லி(5) மகன் ஆப் தாப்(2) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்களை உள்ளே வைத்து விட்டு தாய் ரோஜீகுத் தூண் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் அவர் வீடு திரும்பியவுடன் மின் விளக்கு சுவிட்சை போட்டார். அப்போது டமார் என்று வெடி சத்தம் கேட்டது . சிறிது நேரத்தில் கேஸ் சிலிண்டர் கப கபவெ என்று தீப்பிடித்து வீடே தீ பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர் . தீயை அணைக்க முடியாததால் தீ அணைப்புக்கு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். செங்கல்பட்டு நகர போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். உள்ளே தீயில் எரிந்து கிடந்த 4 பேரையும் மீ ட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவன் ஆப் தாப் சிகிச்சை பலனில்லாமல்  இறந்து போனான் மற்றும் 2 குழந்தைகள் தாயும் ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு பலன் இல்லாமல் 2 குழந்தைகளும் இறந்து போனர். மோசமான நிலையில் ரோஜி குத்துன் சிகிச்சை பெற்று வருகிறார். செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். வீட்டினுள் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் ப துக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அந்த தெருவில் உள்ள பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி பேசி வருகின்றனர்..