கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் கஞ்சா கும்பல் நின்று கொண்டிருப்பதாக ஆனைமலை போலீசுக்கு ரகசியதகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் குமார்விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரிடம் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அவர்களிடம் 4 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் .உசிலம்பட்டி பக்கம் உள்ள கண்ணனூரை சேர்ந்த அன்னக்கொடி ( வயது 42) அவரது மனைவி லட்சுமி ( வயது 34) தேனி மாவட்டம் ,வருசநாடு ஆனந்த் (வயது 35) ஒண்டிப்புதூர் மாணிக்கவாசகம் ( வயது 36) உக்கடத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
4 கிலோ கஞ்சாவுடன் கணவன்- மனைவி உட்பட 5பேர் கைது…
