கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து அவரது மகன் சகானா ( வயது 18) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ. டி. மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்சுகுணாபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பிரியன் ( வயது 19 )இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்..இதை சகானுவுடைய பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் சகானா பிரியனுடன் பேசுவதை தவிர்த்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த பிரியன் ,சகானாவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில்பரவ விடுவதாக கூறி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து பிரியனை தேடி வருகிறார்கள். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஐ.டி.சட்டம் ,கொலை மிரட்டல்உட்பட 4 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.