சென்னை தண்டையார்பேட்டை தனியார் மண்டபத்தில் இன்று ஹிஜாவு நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து ஹிஜாவு விக்டிம் நல சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்து தாங்கள் இழந்த பணத்தை மீட்டெடுப்பதற்கான சட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தலைவராக பாண்டிச்சேரி கருணாகரன், செயலாளராக பாலாஜி, பொருளாளராக தனலட்சுமி, துணைத் தலைவராக பாலசுப்பிரமணியம், துணைச் செயலாளராக ராமகிருஷ்ணன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களாக போரூர் ஜெகதீஷ், தட்சிணாமூர்த்தி, சேரா முகிலன்,செந்தில்குமார்,சென்னை கருணாகரன், கலைச்செல்வி,கீதா,பாத்திமா காந்திமதி,தேவி, முத்துக்குமார், ஷிராசுதின், வீரசின்னையா,விஜி,மும்பை கணேசன்,இந்திரா,ஹரிகிருஷ்ணன்,சத்தியசீலன்,மகேந்திரன்,மணிமேகலை உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் கோவை மருது மற்றும் ஆலோசகர் ஸ்ரீதர், நாகராஜ், சௌந்தர், சுரேஷ்,தனாபலாஜி,வழக்றிஞர் தேவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.