பெட்டிக்கடையில் 14 கிலோ குட்கா பறிமுதல், வியாபாரி கைது…

கோவை செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மயிலேறி பாளையத்தைச் சேர்ந்தவர் சர்புதீன் ( வயது 54 )கடைவீதி அருகே உள்ள பவளம் வீதியில்ஒரு பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்காவிற்பனை செய்யப்படுவதாக கடைவீதி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் லதா நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோகுட்காவும்,குட்கா விற்றபணம் ரூ.5,250 பறிமுதல் செய்யப்பட்டது..வியாபாரி சம்சுதீன் கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.