கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அய்யம்பாளையம், சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் வந்தது போலீசார் அங்கு திடீர் சோதனை . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக ஜமீன் முத்தூர் முத்துக்குமார் (வயது 42) பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கருப்புசாமி ( வயது 48) கருமாபுரம் கணேசன் ( வயது51) நல்லூத்துக்குளி கருப்பசாமி (வயது 33) ஜமீன் முத்தூர் பிரசாந்த் ( வயது 34) சோமந்துறை சித்தூர் குருசாமி ( வயது 42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்டு ரூ.19,900 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
சுடுகாட்டில் சீட்டாட்டம். 6. பேர் கைது …
