உதகை கனமழையால் குடியிருப்பு பகுதியில் விழுந்த ராட்சத மரம்..!

நீலகிரி மாவட்டம் உதகை 18வது வார்டு பகுதி P&T குடியிருப்பு வீட்டின் மேலேயே மிகப்பெரிய மரம் கனமழை மற்றும் அதிவேக காற்றால் சாய்ந்து குடியிருப்பு பகுதியில் விழுந்தது, மற்றும் மின் கம்பங்கள் ஒயர்கள் முற்றிலும் சேதம் அடைந்தது, பகுதி மக்கள் தெரிவித்ததின் பேரில் உடனடியாக மரம் விழுந்த இடத்திற்கு சென்ற 18-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கே முஸ்தபா அவர்கள் மக்களிடம் சூழ்நிலைகளை கேட்டு அறிந்து உடனடியாக மின்வாரிய துறை மற்றும் நகராட்சி துறைக்கு அறிவித்ததின் பேரில் உதகை நகராட்சி நிர்வாகமும் மின் பணியாளர்களும் இணைந்து மழை மற்றும் கடும் காற்றையும் பொறுப்பெடுத்தாமல் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும்பணியில் நகராட்சி மின்பணியாளர்களும் தீவிரமாக செயல்பட்டனர். சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சரி செய்வதும் பிய்ந்து சிதறிய அலுமினிய உயரழுத்த மின் கம்பிகளை மீண்டும் சரிசெய்யும் பணியில் நகராட்சி மின்வாரிய பணியாளர்களும் சிறப்பாக செய்தனர்.
அனைத்து பணிகள் மத்தியில் நகரம் என்ற உறுப்பினர் கே முஸ்தபா KA.இச்சுபாய் KAIயாசர், AB.சித்திக்.. மளிகைக்கடை தம்பி சசி பழக்டைமுஜி ஹாதில்.. ஃபயாஸ், மோகன் தர்வேஷ்.. சந்திரகுமார்…. மற்றும் பல சகோதரர்கள் பணிகள் மத்தியில் உதவியாக இருந்தனர். 18 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் நகராட்சி பணியாளர்கள் மற்றும் மின் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார், 18 வது வார்டு பகுதி மக்களின் அனைத்து குறைகளையும் உடனடியாக எப்போதும் செய்து தந்து மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நகர மன்ற உறுப்பினர் கே முஸ்தபா அவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்..