திருச்சியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ஆஷா (வயது 32 )இவருக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த எழிலரசன் என்பவருக்கும் முகநூல் மூலம் காதல் ஏற்பட்டது . பிறகு காதல் ஜோடிகள் இருவரும் கோவை கணபதி லட்சுமிபுரம் 2வது வீதியில் வீடு எடுத்து தஙகி இருந்தனர். இந்த நாளில் திருமண ஆசை காட்டி எழிலரசன் ஆஷாவிடம் உடலுறவு வைத்திருந்தாராம். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆஷா வற்புறுத்தினார். இதற்கு எழிலரசன் மறுத்து விட்டார். இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த எழிலரசன் ஆஷாவை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி விசாரணை நடத்தி திருவண்ணாமலையை சேர்ந்த எழிலரசனை தேடி வருகிறார்..
திருமணம் முடிக்காமல் உடலுறவு வைத்த காதலன் மீது காதலி போலீசில் புகார்.!!
