கோவை அருகே உள்ள ஈச்சனாரி, செட்டிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி முத்தமிழ் செல்வி ( வயது 58)ஓய்வு பெற்ற ஆசிரியை தற்போது குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஈச்சனாரி பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு பஸ்சில் ஏறினார். குனியமுத்தூர் சென்றதும் பஸ்சை விட்டு இறங்கும் போது அவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை காணவில்லை .யாரோ திருடிவிட்டனர் .இது குறித்து முத்தமிழ் செல்வி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.