கோவை தியாகி குமரன் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 46) இவர் சொந்தமாக தங்கப்பட்டறை நடத்தி வருகிறார்.இவரது நகைப் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பாபு சோனா சமந்தர் கோஸ்,சாமர் ஆகியோரிடம் 327 கிராம் தங்கத்தை கொடுத்து நகைகள் செய்து கொடுக்கும்படி கொடுத்திருந்தார் .இவர்கள் அந்த நகையுடன் எங்கோ மாயமாகிவிட்டனர். இது குறித்து ரமேஷ் பாபு ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதேபோல கோவை ஆர். எஸ். புரம். வள்ளியம்மாள் வீதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 55) இவரும் தங்கப்பட்டறை நடத்தி வருகிறார் .இவர் அவரிடம் வேலை செய்து வந்தமேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குரு கபிராஜ் என்பவரிடம் 850 . 870 கிராம் தங்கத்தை கொடுத்து நகைகள் செய்து கொடுக்குமாறு கூறியிருந்தார் .இவர் அந்த தங்க கட்டிகளுடன் அவர் எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து பிரவீன் ஆர் எஸ் புரம் போலீசில் புகார் செய்துள்ளார் . போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வருகிறார்கள்.