அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல் – முதல்வர் ஸ்டாலின்.!

ரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பணிகாலத்தில் பெற்ற ஊதியத்தில் குறிப்பிட்டப் பங்கை ஊழியர் மரணிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கும் முறை தான் பழைய ஓய்வூதியத் திட்டம். பழைய ஓய்வூதியத் திட்டமானது 2004ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் தேசிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்தது.ஆனால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறுக்கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.அதன்படி “அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும்” என்று முதல்வர் அறிவித்துள்ளார்.