அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கையால் பரபரப்பு
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சிக்கு பாத்தியப்பட்ட வாடகை கடைகளில் பல கடைகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகைகளை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவிற்கிணங்க வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுபானக்கடை முதல் சுமார் 14 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் பொதுமக்கிளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது