கல்லறை திருநாள் நிகழ்ச்சி..

கோவை : கிறிஸ்தவர்கள் இறந்த தங்கள் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதி அவர்களை அடக்கம் செய்த கல்லறை தோட்டத்திற்கு சென்று சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி கல்லறை திருநாள் என்று அழைக்கப்படும். இதன்படி கோவை சுங்கம், திருச்சி ரோடு, காந்திபுரம் போத்தனூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அந்த பகுதிகளில் ஏராளமான பூக்கடைகளும், மெழுகுவர்த்தி கடைகளும் அமைக்கப்பட்டிருந்தது.