ஜிஎஸ்டி – பிஎஃப் நிறுவனத்திற்கு பணத்தை செலுத்தாமல் ரூ.44 லட்சத்து 62 ஆயிரத்தை அபேஸ் செய்த பெண் கணக்காளர் கைது..!

ஆவடி: ஜி எஸ் டி பி எஃப் இ எஸ் ஐ சி ஆகிய தொகைகளை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் திருடிய கணக்காளர் ஜெயந்தி மீது ரூபாய் 44 லட்சத்து 62 ஆயிரத்து 400 திருடியதாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . இது பற்றிய விவரம் வருமாறு ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் சிவா ஹரி என்டர்பிரைசஸ் மேனேஜர் பிரித்திவிராஜன் வயது 44. என்பவர் கொடுத்துள்ள புகார் மனு நான் சிவா ஹரி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருவதாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் ஆவடி சேக்காடு தனலட்சுமி நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்த மனோகரன் மனைவி ஜெயந்தி கணக்காளராக வேலை செய்து வந்தாள். வேலைக்கு சேர்ந்த காலத்தில் நம்பிக்கைக்கு உரியவளாக நடந்து கொண்டதால் அவளை நம்பி நிர்வாக இயக்குனர் மற்றும் மேனேஜரும் மேற்படி நிறுவனத்தின் கரண்ட் அக்கவுண்ட் உள்ள முகப்பேர் கிளையின் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கணக்கை கையாளவும் கம்பெனியின் இதர செலவுகளை கையாளவும் பணத்தை காசோலை மூலமாக பணத்தை எடுக்க ஜெயந்தி மூலமாக முழு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. கம்பெனியின் மேனேஜர் வங்கியின் மேனேஜர் மற்றும் பணியாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். 2023 ஆம் ஆண்டு முதல் ஜி எஸ் டி பி எஃப் இ எஸ் ஐ சி ஆகிய தொகைகளை வங்கியில் சரிவர வரவு வைக்காமல் இருந்ததால் ஜிஎஸ்டி பிஎஃப் அலுவலகத்தில் இருந்து கம்பெனிக்கு தொடர்ச்சியாக நிலுவைத் தொகையை கட்டுமாறு புகார்கள் வந்ததால் ஜெயந்தியிடம் நிறுவனத்தின் மேனேஜர் கேட்கும்போதெல்லாம் அனைத்து தொகைகளையும் செலுத்தி விட்டதாக கூறினாள். மேலும் ஆன்லைன் செலான் போலியாக தயாரித்து பிரிண்ட் எடுத்துக் கொடுத்து பிஎஃப் மற்றும் இ எஸ் ஐ சி கட்டி விட்டதாக நாடகம் ஆடினாள்.கடந்த 13.4.2024 முதல் வேலைக்கு வருவதில்லை. கம்பெனியின் கரண்ட் அக்கவுண்டை சரிபார்த்த போது கம்பெனியின் வங்கி கணக்கில் இருந்து ஏ டி எம் மூலம் 5.10.2021 ஆண்டு முதல் ரூபாய் 22 லட்சத்து 88 ஆயிரத்தை எடுத்துள்ளதாக தெரிய வந்தது. நிறுவனத்தின் இயக்குனரிடம் கையெழுத்து வாங்கி கம்பெனி பயன்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டிய 16 காசோலைகளில் செல்ப் என ஜெயந்தி குறிப்பிட்டு ரூபாய் 21 லட்சத்து 74 ஆயிரத்து 400 ஐ எடுத்துள்ளது தெரிய வந்தது. மேலே குறிப்பிட்ட வங்கிக்கு சென்று கேட்டபோது கம்பெனியின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கும் பணத்தை ஜெயந்தி தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளதாக தெரிய வந்தது.இதை வங்கியின் கேசியர் தெரிவித்துள்ளார் கம்பெனியில் திருடிய பணம் ரூபாய் 44 லட்சத்து 62ஆயிரத்து 400 ஆகும். இதுகுறித்து நிர்வாகம் தரப்பில் ஜெயந்தியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சரிவர பதில் சொல்லாமல் ஆசைக்கணவன் மனோகரன் சேர்ந்து மிரட்டியுள்ளான் . இது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி ஆவண நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆவடி போலீஸ் கமிஷனர் கே. சங்கர் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி மேற்பார்வையில் கொள்ளைக்காரி ஜெயந்தி ஆர்கேஆர் அட்சயா ப்ளாட்ஸ் தனலட்சுமி நகர் சேக்காடு ஆவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டாள். பூந்தமல்லி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டாள். புழல் மத்திய சிறையில் அடைத்தனர் .