கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் நேற்று ராஜ வீதியில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட் கா) மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக ராஜு (வயது 65) சரவணா குமார் ( வயது 39 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது .
இதே போல ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று சுக்கிரவார்பேட்டை சின்ன எல்லை செந்தில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு குட்கா மறைத்துவைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சின்ன எல்லை வீதியை சேர்ந்த சுஜாதா (வயது 58 )ஆர். எஸ். புரம் லிங்கப்ப செட்டி வீதியைச் சேர்ந்த ராஜி (வயது 19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சாய்பாபா காலனி என் .எஸ் . ஆர். ரோட்டில் குட்கா விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்த செல்வகுமார் ( 38 ) கைது செய்யப்பட்டார். காளப்பட்டி ரோடு என்.ஜி.பி நகரில் உள்ள டாஸ்மாக் கடைபக்கம் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்ட ஆவுடையார் கோவில் வீதியை சேர்ந்த மனோஜ் ( 25 ) கைது செய்யப்பட்டார். குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.