கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் நேற்று தெலுங்குபாளையம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா ) பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஆலாந்துறை சித்தராஜ் (வயது 37) தெலுங்குபாளையம்,வேடப்பட்டி ரோட்டை சேர்ந்த கருப்புசாமி ( வயது 45 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .105 கிலோ குட்கா, 2 கார், செல்போன்கள், பறிமுதல் செய்யப்பட்டது. அசோக் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.
இதேபோல பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று வி. கே. ரோடு, குமரன் நகர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்ததாக தேனி மாவட்ட பெரியகுளம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த யாதவ் பிரசாத் ( வயது 33) கொண்டையம் பாளையம் பக்கமுள்ள வரதய்யங்கார் பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் ( வயது 56 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 86 கிலோ குட்கா,ரூ 24,630பணமும், ஒரு ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. நாராயணன் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.இவரை தேடி வருகிறார்கள்..