கோவை கடைகளில் குட்கா விற்பனை – 3 வியாபாரிகள் கைது..!

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை,சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர்ர் உக்கடம் இஸ்மாயில் வீதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா ) விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆர். எஸ். புரம், தடாகம் ரோடு குமாரசாமி காலனி தினேஷ்குமார் (வயது 27 )கைது செய்யப்பட்டார், 77 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல ராமநாதபுரம் போலீசார் அங்குள்ள நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு குட்கா மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை நடத்தி வந்த பரமக்குடி சதீஷ்குமார் ( வயது 33) ஹரிஹரன் ( வயது 21)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 112 பாக்கெட் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.