பூந்தமல்லியில் குட்கா விற்பனை : ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் – 10 கடைகளுக்கு சீல்.!!

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் போலீஸ் கமிஷனர் சங்கர் அவர்களால் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 50 போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இணைந்து ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடியாக ஒரே சமயத்தில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆவடி காவல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வேலவன் வெங்கடேசன் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து பூந்தமல்லி திருவேற்காடு திருநின்றவூர் மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கார்மேகம் சந்திரசேகர் சிவசங்கரன் ராஜா முகமது ஆகியோருடன் இணைந்து செங்குன்றம் அம்பத்தூர் மணலி சோழவரம் எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிரடியாக திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 22 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு 14 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் குட்கா விற்பனை செய்த குற்றவாளிகளின் மீது கலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தும் இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு ரூபாய் 50 ஆயிரம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிரடி சோதனையில் 14 குற்றவாளிகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூபாய் 3 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதித்தும் கடையில் வைத்து விற்பனை செய்த 10 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூடி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  இதுபோன்று அதிரடி திடீர் சோதனை கள் தொடர்ந்து நடைபெறும். குட்கா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்..