கோவை ஆர். எஸ். புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் நேற்று அங்குள்ள டி.பி. ரோடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் . அங்கு 240 குட்கா பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த கணபதி கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்த வசந்தகுமார் ( வயது 29 )கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
குட்கா விற்ற வியாபாரி கைது..!
