கோவை மாவட்டத்தில் குட்கா விற்ற 90 கடைகளுக்கு சீல் வைப்பு.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இந்த நிலையில் கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்,துணை போலீஸ் கமிஷனர்கள் சண்முகம், சந்தீஷ் ஆகியோர் மேற்பார்வையில் கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் 2-ந் தேதி வரை 4 நாட்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போலீசார் இணைந்து மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த கள ஆய்வு போது கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று சோதனை செய்யப்பட்டது. இதில் மாநகர எல்லைக்குட்பட்ட காந்திபுரம், சரவணம்பட்டி,, குனியமுத்தூர், உக்கடம் ‘சுந்தராபுரம், பீளமேடு ,கணபதி சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளின் 30 கடைகளுக்கும் பொள்ளாச்சி கிணத்துக்கடவு, மதுக்கரை தொண்டாமுத்தூர், சூலூர், பெரியநாயக்கன்பாளையம் ஆனைமலை, அன்னூர் பகுதிகளில் 60 கடைகளுக்கும் மொத்தம் 90 கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 90 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.