கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனி,பி அன் .டி .காலணியில் துணை தபால் நிலையம் உள்ளது. இங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 6 – 2 – 2020 முதல் 19 -2 -20 வரை பொது மக்களின் சேமிப்பு பணம் ரு27 லட்சத்து 80 ஆயிரம் கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை வடக்கு பகுதி தபால் துறை உதவி சூப்பிரண்டன்ட் பாலாஜி ,சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சரவணன் இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ் மீது மோசடி உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..
கோவை தபால் அலுவலகத்தில் ரூ.27 லட்சத்து 80 ஆயிரம் கையாடல் – போஸ்ட் மாஸ்டர் மீது வழக்கு.!!
