உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது..2025ம் ஆண்டின் முதல் நாளான இன்று இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.
கோயில்கள்,தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..
அதே போல் பொதுமக்கள் கடற்கரை, நட்சத்திர விடுதிகளில் வாண வேடிக்கையுடன் ஆங்கில புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர்..
வாழ்க்கையை கொண்டாடுங்கள்… புதிய செய்தியை கொண்டாடுங்கள்… இந்த ஆண்டு புத்தாண்டு உங்களுக்கு ஒரு சிறந்த துவக்கமாக இருக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!
ரோமானியர்கள் தான் காலெண்டரை முதல் முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக வரலாறு சொல்கிறது. ஜெர்மனிய பாதிரியாரான வானியல் மேதை கிறிஸ்டோபர் கிளாவியஸ் சூரியனின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு ஒரு காலெண்டரை வடிவமைத்தார் . 1582-ஆம் ஆண்டு 13-வது போப்-ஆகா இருந்த கிரிகோரி இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதற்கு கிரிகோரியன் காலெண்டர் என்று பெயரும் வைக்கப்பட்டது. அதை தான் இந்த உலகம் இன்று வரை பயன்படுத்தி வருகிறது. ரோமானிய கடவுளான ஜோனஸ் என்பதை குறிக்கும் வகையில் தான் ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டது. அதனால் அந்த மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாக வைத்து அந்த மாதத்தின் முதல் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள்.
ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாக டிசம்பர் 31-ஆம் தேதி குறுகிய வெளிச்சம் கொண்ட நாளாக இருக்கிறது, அடுத்த நாளான ஜனவரி 1-ஆம் தேதி அதிக வெளிச்சம் கொண்ட நாளாக இருக்கிறது. இருட்டில் இருந்து வெளிச்சம் பிறக்கும் இந்த நாள் தான் புத்தாண்டாக இருக்க தகுதியான நாளாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு வாழ்விலிருந்து புதியதொரு வாழ்விற்கான துவக்கமாக அதை பார்க்க வேண்டும். சூரியன் மறைந்து மீண்டும் உதிக்கும் ஒவ்வொரு நாளும் புத்தாண்டாக கருதவேண்டும்.
2025 ஆண்டு கோரவில் உள்ள அனைவருக்கு நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துங்கள்….
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025: வணக்கம் நண்பர்களே..! அனைவரையும் அன்புடன் வரவேற்போம். அனைவருக்கும் நமது நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..