“அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எங்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக தேசிய பத்திரிகையாளர் தின வாழ்த்துக்கள்”
நவம்பர் 16ம் தேதியான இன்று நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது ..தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளைக் கவுரவிக்க தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய ஜனநாயகத்தில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகைகளை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ஆம் தேதி தேசிய பத்திரிகை தினம் அனுசரிக்கப்படுகிறது. அத்துடன், பத்திரிகைகள் உயர் தரத்தைப் பேணுவதையும், எந்த ஒரு செல்வாக்கும், அச்சுறுத்தலும் பத்திரிகையை கட்டுப்படுத்தப்பட கூடாது