பெண் அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறும் பெண்கள் தங்கள் மறைவுக்கு பிறகு ஓய்வூதியத்தை பெறும் வாரிசுதாரர் நியமனத்தில் கணவருக்குப் பதிலாக குழந்தைகள் பெயரைச் சேர்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மத்திய குடிமைப் பணி விதிகள் திருத்தம் செய்யப்பட்ட அறிவிப்பு நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, பெண் அரசு ஊழியர்கள் மறைவுக்குப்பின் அல்லது, விவாகரத்து, குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை ஏதேனும் நடந்தால் வாரிசாக குழந்தைகளை நியமிக்கலாம். தற்போது அரசு பெண் ஊழியர் மறைவுக்கு பிறகு ஓய்வூதியம் அவரின் கணவருக்கு செல்லும், கணவர் இறந்துவிட்டால் தகுதியான வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் செல்லும். இந்நிலையில் பெண் ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் வாரிசுதாரர் பகுதியில் கணவருக்குப் பதிலாக குழந்தைகளை நியமிக்க அனுமதி வேண்டி அரசுக்கு கோரி விடுத்திருந்தனர். கணவருடன் திடீரென ஏற்படும் தகராறு, விவகாரத்து போன்ற நடந்து பிரிந்து செல்லும்பட்சத்தில் ஓய்வூதியம் அவருக்கு சென்றுவிடும். அதனால் குழந்தைகளுக்கு பயன் கிடைக்காமல் சிரமப்படும். எனவே குழந்தைகளை முதன்மை வாரிசுதாரராக நியமிக்க அனுமதி கோரி இருந்தனர். இதனை ஏற்று மத்திய பணியாளர் மற்றும் மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் “பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் இறப்புக்குப்பின், அல்லது விவாகரத்து முடியாமல் இழுபறியாக இருந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்.
பெண் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரர் மறைவுக்கு பின்பும், கணவர் மீது வரதட்சணை வழக்கு, குடும்ப வன்முறை வழக்கு நிலுவையில் இருந்தாலும் இந்த விதிமுறை மாற்றம் பொருந்தும். பெண் அரசு ஊழியர் தங்களுக்குப்பின் வாரிசுதாரர கணவருக்குப் பதிலாக குழந்தைகளை நியமிக்கக் கோரி தங்களின் தலைமை அலுவலகத்துக்கு கடிதம் எழுதலாம். அந்த சமையத்தில் பெண் ஊழியர்கள் திடீரென உயிரிழந்துவிட்டாலோ அல்லது ஓய்வூதியதாரர் உயிரிழந்தாலோ, கணவர் மீது ஏதேனும் வரதட்சணை வழக்கு, குடும்பவன்முறை வழக்கு நிலுவையில் இருந்தால், ஓய்வூதியம் குழந்தைகளுக்கு செல்லும். பெண் அரசு ஊழியர் திடீரென இறக்கும்போது குழந்தைகள் மைனராக இருந்தால், குடும்ப ஓய்வூதியம் என்பது, குழந்தைகளின் காப்பாளருக்குச் செல்லும். குழந்தைகள் மேஜராக அல்லது 18வயது நிரம்பியபின், குடும்ப ஓய்வூதியம் குழந்தைகளுக்குச் செல்லும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.