கோவை துடியலூர் கணுவாய் ரோட்டில் உள்ள எஸ் .எம் . டி. நகரை சேர்ந்தவர் சபாபதி (வயது 69) நேற்று முன்தினம் இவரது செல்போனுக்குமும்பையில் இருந்து ஒருஅழைப்பு வந்தது. அதில் பேசியவர் தன்னை மும்பைச் சேர்ந்த அதிகாரி என்றும் பணம் பரிமாற்றம் மோசடி தொடர்பாகமும்பையில் நரேஷ் கோயில் என்பவரை கைது செய்துள்ளோம்.அவரது வீட்டில் 247 ஏ.டி.எம் கார்டுகள் கைப்பற்றி உள்ளோம். அதில் தங்கள்பெயரில் உள்ளஏடிஎம் கார்டும் உள்ளது.இதனால் இந்த மோசடிக்கும் உங்களுக்கும் தொடர்பு உள்ளது.உங்களை கைது செய்ய வருவோம். அதற்கு முன்னதாக தங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் உங்கள் வங்கி கணக்கு விவரத்தையும்,பணத்தையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.பிறகு திரும்ப கொடுத்து விடுவோம். என்று கூறினார் .இதை நம்பிய சபாபதிபல்வேறு தவனைகளில் அந்த முகவரிக்குரு 22 லட்சத்து 79 ஆயிரத்து 200அனுப்பினார்.பின்னர் அந்த பணம் அவருக்கு திரும்பி வரவில்லை . மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த சபாபதி கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
போலீஸ் அதிகாரி போல நடித்து முதியவரிடம் ரூ.22.79 லட்சம் மோசடி..!
