கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர்பால்ஸ் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக கடந்த ஐந்து வருடங்களாக பணிபுரிந்து வருபவர் குலசேகரன். இவர் அங்கலக்குறிச்சி பகுதியிலிருந்து தினந்தோறும் பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் அப்பள்ளியில் தற்காலிக பெண் ஆசிரியையாக பணி புரிந்து வருபவரை தொடர்ந்து சில்மிஷம் செய்ய முயன்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தலைமையாசிரியரின் அறைக்கு சென்ற தற்காலிக பெண் ஆசிரியையை தலைமையாசிரியர் குலசேகரன் மானபங்கம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காடம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . புகாரின் பேரில் சம்பவப் பகுதிக்கு விரைந்து சென்ற வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நேரடி விசாரணை செய்ததில் அவர் திருமணமானவர் என்றும் சம்பவம் உண்மை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக தலைமையாசிரியர் குலசேகரன் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..