அசாமில் மொத்தம் 31 மாவட்டங்கள் இதுவரை 20 மாவட்டங்கள் வெள்ளத்தால் தீவிர பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இங்கு வசிக்கும் சுமார் 1.20 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போன நிலையில், மேலும் சில நாள்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரெஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
நல்பாரி, பக்சா, லக்கிம்பூர், தமுல்பூர், பர்பேட்டா ஆகிய மாவட்டங்கள் தீவிர பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மாநில பேரிடர் ஆணையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நிவாரண முகாங்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேகி, பக்லதியா, புதிமாரி ஆகிய நதிகளின் நீர்மட்டம் ஆபத்தான நிலையை தாண்டியுள்ளன.