கோவையில் கடந்த மாதம் முதல் வெயில் மக்களை வாட்டி எடுத்து வந்தது.இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர் .இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.இதனால் வெயில் தாக்கம் குறைவாக இருந்தது. இதையடுத்து மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. அதைத் தொடர்ந்து நகரின் பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது .கோவை பீளமேடு நீலாம்பூர் ,இருகூர் மலுமிச்சம்பட்டி ,போத்தனூர், ரேஸ்கோர்ஸ் ராமநாதபுரம், சிங்காநல்லூர் கணபதி உள்ளிட்ட நகரில் பெரும்பாலான பகுதிகளில் பலத்தமழை பெய்தது .இதனால் வெப்பம் தணிந்தது. சாலைகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது . அந்த தண்ணீரை பீச்சி அடித்த படி வாகனங்கள் சென்றன . 3 மாதங்களுக்கு பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ஆர் .எஸ் . புரம் பழனிச்சாமி லே-அவுட் பகுதியில் கனமழையால் அங்கிருந்த ராட்சத மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் -இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தது. மழை நிலவரம் குறித்து ஆய்வாளர் சந்தோஷ் கிரீஸ் கூறியதாவது:- கோவை உட்பட கொங்கு மண்டலத்தில் நேற்று ( புதன்கிழமை) மதியம் முதல் இன்று (வியாழக்கிழமை) இரவு வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. ஈரோடு, திருப்பூர் ,நாமக்கல் கரூர் ,சேலம், திண்டுக்கல் நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது அடுத்த மாதம் 2 – ந் தேதி முதல் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை மழையால் வெப்பம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் பலத்த மழை… சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்.!!
