கோவை , திருப்பூர், நீலகிரி உட்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் சில இடங்களில் நேற்று மழை பதிவாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று ( சனிக்கிழமை) தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும் நீலகிரி ,கோவை திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி தர்மபுரி ,தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இதைத் தொடர்ந்து நாளை (ஞாயிறு) தமிழ்நாட்டில் சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.