கனமழை எதிரொலி… கோவை – சென்னை செல்லும் 5 விமானங்கள் ரத்து.!!

வங்கக்கடலில் உரு வானபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது . இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறி உள்ளது .புயல் மழை காரணமாக சென்னையில் விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கிகுளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது . இதை யடுத்து கோவை விமான நிலையத்திலிருந்து நேற்று காலை முதல் மாலை வரை சென்னை செல்ல வேண்டிய 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன . இதன் காரணமாக 600 க்கு மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். அவர்கள் விமான நிலையத்தில் தங்கியிருந்தனர்..