முகவரி கேட்பது போல நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு…

கோவை பக்கம் உள்ள விளாங்குறிச்சி, குறிஞ்சி மாநகர சேர்ந்தவர் தன்ராஜ். இவரின் மனைவி செல்வி (வயது 63) இவர் நேற்று குறிஞ்சி மாநகர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாகபைக்கில் வந்த 2 ஆசாமிகளில் ஒருவர் செல்வியிடம் முகவரி கேட்பது போல நடித்து அருகில் சென்றுஅவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து சென்று விட்டனர். இது குறித்து செல்வி பீளமேடுபோலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.