திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா கூத்தாண்ட குப்பம் ஊராட்சி நாயக்கன் வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் பட்டா இடங்களில் கடந்த ஒரு வார காலமாக இரண்டு ஜேசிபி இயந்திரம் 4 டிராக்டர் 1 டிப்பர் லாரி வாகனங்களில் தினம் தோறும் தொடர் மண் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ள ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சுரேஷ் மற்றும் திமுக பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோர் சேர்ந்து தனிநபருக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை அப்பகுதி பொதுமக்கள் நேரில் சென்று தங்கள் பகுதியில் தார் சாலை சேதம் அடைவதாகவும் இரவு நேரங்களில் தங்கள் பகுதியில் மண் எடுப்பதால் வாகன சத்தத்தில் தூங்க முடிவதில்லை கூறியுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று மதியம் சம்பவ இடத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் வருவதை அறிந்த மண் கடத்தல் ஈடுபட்ட நபர்கள் ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். லாரியை மட்டும் சிறைபிடித்த ஊராட்சி மன்ற தலைவர் கிராம நிர்வாக அலுவலர் கௌசல்யா மற்றும் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார் வருவாய் அலுவலர் அன்னலட்சுமி கோட்டாட்சியர் பானு ஆகியோருக்கு புகைப்படம் மற்றும் தகவலை தெரிவித்துள்ளார். நேரில் வந்த கிராம நிர்வாக அலுவலர் கௌசல்யா அரசு அனுமதி பெற்று மண் எடுப்பதாக முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவரிடம் கூறியுள்ளார். அனுமதி காட்டுங்கள் கேட்டதற்கு மண் கடத்தல் காரர்கள் ஆம்பூர் தாலுக்கா வெங்கடசமுத்திரம் பகுதியில் கல்குவாரி மண் எடுப்பதற்கான அரசு வழங்கிய அனுமதி சீட்டை வைத்துக்கொண்டு நாட்றம்பள்ளி தாலுகாவில் மண் எடுத்து விற்பனை செய்வது தெரியவந்தது இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு லாரி மற்றும் ஜேசிபி இயந்திரங்களை விடுவித்துள்ளார். அங்கிருந்த முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாருக்கு மண் கடத்தலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொலை மிரட்டல் விடுத்து தாக்காத வார்த்தையில் பேசியுள்ளார். விரக்தி அடைந்த சிவகுமார் அரசு அதிகாரிகள் மண் கடத்தல் காரர்களுக்கு துணை போவதை அறிந்த நேற்று 30.11.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்களை வரவழைத்து சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் செய்தியாளர்களை சந்தித்து நடந்த குற்ற சம்பவங்களை எடுத்துக் கூறி மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை விசாரணை மேற்கொண்டு மண் கடத்தல்காரர்கள் மீதும் அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.