பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் உடுமலை ரோட்டில் உள்ள கற்ப விநாயகர் கோவில் அருகே நேற்று வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது 2 பைக், ஒரு ஸ்கூட்டரில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அவர்களிடம் 100 கிராம் கஞ்சா 330 மில்லிகிராம் உயர்ரக போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சியாஸ் ( வயது 27) அஜீஸ் (வயது 33) அபிமன்யு (வயது 21) முகின்( வயது 21)என்பது தெரிய வந்தது. 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.கஞ்சா, போதைப்பொருள், 2 பைக், ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..