திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு சேர்ந்த கவிதா என்ற பெண் கடந்த ஆண்டு கொடைக்கானலில் அவகோடா மரங்களை வடகரைபாறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறியதன் பேரில் குத்தகைக்கு பிடித்ததாகவும், அதில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் அவகோடா காய்களை கார்த்திக் திருடி விற்றதாகவும், இதுகுறித்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் கடந்தும் இதுவரை காவல் துறையினர் அவகோடா திருடர்களை பிடிக்கவில்லை என குற்றம்சாட்டும் அவர் திருடர்கள் அவகோடா பழங்களை திருவி விட்டு ஜாலியாக அப்பகுதியில் சுற்றி வருவதாக அவர் பணத்தை இழந்த அவர் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் விசாரணை செய்த போது வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் பணி இட மாறுதலாகி சென்று விட்டதாகவும், தற்பொழுது இருந்த உதவி ஆய்வாளர் வாகன விபத்தில் கால்கள் உடைந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் இரண்டு நாட்களுக்குள் திருடர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
திருடர்கள் மீது வழக்கு பதிவு செய்து இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் முன்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.