தஞ்சையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் ,பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெகதீசன் வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட தலைவர் ஏ.கே. வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கஜானாதேவி, மாவட்ட தலைமை செயலாளர் சாமிக்கண்ணு ,மாவட்ட துணை தலைவர் பிரகாஷ் ,மாவட்ட துணை தலைவர் மனோகரன், மாவட்ட சட்ட செயலாளர் பழனிவேலு, மாவட்ட இணை செயலாளர் நேரு, மாவட்ட இணை செயலாளர் அக்பர் ஷபி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் அல்லி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ராஜேஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பிரச்சார செயலாளர் ரமேஷ் குமார் சிறப்புரை ஆற்றினார். மண்டல செயலாளர் மணியரசன் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார் .மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி நன்றி உரை கூறினார் .

இந்த ஆர்ப்பாட்டத்தில்,தஞ்சை கல்வி மாவட்டம் ,பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், கும்பகோணம் கல்வி மாவட்டம், ஒரத்தநாடு கல்வி மாவட்டம், ஆகியவற்றில் உள்ள தலைமை ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.