அடித்தது ஜாக்பாட்!! 11 துப்புரவு பணியாளர்கள் சேர்ந்து வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு..!!

கேரள மாநில அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பருவ மழைக்கால லாட்டரிச் சீட்டு வெளியிடப்பட்டிருந்தது.

பம்பர் பரிசு 10 கோடி ரூபாய் உள்ளிட பல பரிசுத் தொகைகளை கொண்ட இந்த லாட்டரித் திட்டத்தில் 27 லட்சம் டிக்கட்டுகள் அச்சிடப்பட்டன. ஒரு டிக்கெட் 250 ரூபாய் என விற்பனைச் செய்யப்பட்டது.

லாட்டரி பரிசு கிடைத்த நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல்: நீங்கள் எளிதாக செய்யலாம்… எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!

இந்த லாட்டரி சீட்டின் குலுக்கல் நடத்தப்பட்டு முடிவுகள் கடந்த 26-ம் தேதி வெளியாயின. அதில் MB 200261 என்ற எண் கொண்ட லாட்டரிச் சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்திருந்தது. பாலக்காட்டில் விற்பனையான அந்த லாட்டரிச் சீட்டை வாங்கியது யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், நேற்று மலப்புறம் மாவட்டம் பரப்பனங்காடி நகராட்சி தூய்மைப் பணியாளர்களான 11 பேர் சேர்ந்து அந்த டிக்கெட்டை வாங்கியுள்ளது தெரியவந்தது.

நகராட்சி தூய்மைப் பணியாளர்களான குட்டிமாளு, பேபி, சோபா, பார்வதி, ராதா, லட்சுமி, லீலா, பிந்து, ஷீஜா, சந்திரிகா, கார்த்தியாயனி ஆகிய 11 பேரும் சேர்ந்து அந்த லாட்டரிச் சீட்டை வாங்கி உள்ளனர்.

இந்த 11 பேரும் சேர்ந்து பணி செய்துகொண்டிருந்தபோது மலப்புறம் குற்றிப்புறம் பகுதியைச் சேர்ந்த மணி என்ற ஏஜெண்ட் லாட்டரி டிக்கெட் விற்க வந்துள்ளார். டிக்கெட் விலை 250 ரூபாய் என்றதும் அவர்கள் வாங்க தயங்கினர். ஆளுக்கு 50 ரூபாய் வீதம் கொடுத்து டிக்கெட் வாங்கலாம் என நினைத்தனர். ஆனால், அவர்கள் பர்சில் 50 ரூபாய் இல்லை. எனவே, 9 பேர் ஆளுக்கு 25 ரூபாய் வீதம் தந்து இந்த லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர். இரண்டு பேர் சேர்ந்து 25 ரூபாய் கொடுத்துள்ளனர். ஆக, 11 பேரின் ஷேரில் 250 ரூபாய் வந்துள்ளது. அந்த பணத்தில்தான் லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளனர். ஒரு மாதம் முன்பு இந்த லாட்டரி சீட்டை வாங்கி உள்ளனர்.

பரிசு விழுந்ததை அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்த துப்புரவுத் தொழிலாளர்கள் லாட்டரி டிக்கெட்டை வங்கியில் ஒப்படைத்துள்ளனர். இந்தக் குழுவில் வீடு இல்லாதவர்கள், நிலம் கூட இல்லாதவர்கள் உள்ளனர். அவர்களை நகராட்சி அதிகாரிகள் வாழ்த்தினர். இதற்கு முன்பு இதே குழுவினர் எடுத்த ஓணம் பம்பர் லாட்டரியில் 7,500 ரூபாய் பரிசு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பருவமழை லாட்டரியில் இரண்டாம் பரிசாக 5 பேருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 25 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாயும். நான்காம் பரிசாக 5 பேருக்கு தலா 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படுகிறது.