கோவை மதுக்கரை அருகே உள்ள பாலத்துறை,பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பே கவுடர் (79) விவசாயி. நேற்று இவர் நாச்சிபாளையம்-வேலாந்தவளம் ரோட்டில்நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது.இதில் சுப்பேகவுடர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.இது குறித்து அவரது மகன் ரவிச்சந்திரன் மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.