ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முனிசிபல்சத்திரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக சீமான் மீது புகார் எழுந்தது. பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரில் சீமான், நா.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.