கல்குவாரி குட்டையில் குதித்து கணவன், மனைவி தற்கொலை..

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள உதயம் நகரில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள குட்டையில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த குட்டையில் நேற்று ஒரு ஆணும் பெண்ணும், பிணமாக மீதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர் .இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி இருவரது உடல்களையும் கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர் .இதையடுத்து 2 உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்தி விசாரணையில் குட்டையில் குதித்து தற்கொலை செய்தவர்கள் கிணத்துக்கடவு பக்கம் உள்ள கருப்பம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 69) அவரது மனைவி மல்லிகா ( வயது 58) என்பது தெரியவந்தது. மேலும் மல்லிகா மாரிமுத்துவின் இரண்டாவது மனைவி ஆவார். இவர்  கிணத்துக்கடவு பகுதியில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர்களுக்கு பாக்கியலட்சுமி ( வயது 32) என்ற ஒரே ஒரு மகள் உள்ளார் . இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டில் திருமணம் ஆகி 2016 ஆம் ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது .இதனால் மகள் பாக்கியலட்சுமி தன் தாய்,தந்தையுடன் வசித்து வந்துள்ளார். திருமணம் ஆகியும் தனது மகள் வாழ்க்கை சீரழிந்து விட்டதே என மனவருத்தத்தில் இருந்து உள்ளனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தம்பதி சாணி பவுடரை குடித்தனர்.சாகாததால் ஜோடியாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது .இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.தம்பதிகள் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.