மனைவியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய கணவர் கைது ..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் பெற்றோரின் எதிர்ப்பு மீறி அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு அன்னூரில் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து இளம்பெண் தனது குழந்தையுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இதற்கு இடையில் அந்தப் பெண்ணை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அவரது கணவர் அழைத்தார். அதற்கு அவர் மறுத்தார் .இந்த நிலையில் உன்னுடன் தனிமையில் இருக்கும் போது எடுத்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று கணவர் மிரட்டினாராம். ஆனாலும் இளம்பெண் செல்லாததால் அவரது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் அவர் கணவர் வெளியிட்டார் .இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கணவரின் வீட்டுக்கு நியாயம் கேட்கச் சென்றார் .ஆனால் அங்கிருந்த அவரது மாமியார் அவரை திட்டி அனுப்பிவிட்டார். இதையடுத்து நேற்று காலை மனைவியின் வீட்டுக்கு வந்த அவரது கணவர் மாமனார், மாமியார் கணவரின் பெரியம்மா ஆகியோர் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரை நேற்று கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மாமனார், மாமியார் உட்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.