கோவை மாவட்டம் அன்னூர் ,ஒட்டர் பாளையம் பக்கம் உள்ள பூலுவாலயம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 49) விசைத்தறி தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர் இவர் நேற்று வீட்டில் இருந்த ரேஷன் கார்டு எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்கு சென்றார். அங்கு பொங்கல் பரிசாக வழங்கப்பட்ட ரூ ஆயிரத்தை வாங்கிக் கொண்டு டாஸ்மாக் கடையில் மது குடித்தாராம்.இதை இவரது மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த பாலகிருஷ்ணன் நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொங்கல் பரிசு பணத்தை குடித்து செலவழித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை..
