கோவை பீளமேடு காந்திமா நகர், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி பூங்கொடி ( வயது 25)இவருக்கு 5 வயதில் ஒரு மகளும் 3 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர்.இந்த நிலையில் பூங்கொடி யாரிடமோ செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவரது கணவர் கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி கடந்த 18–ஆம் தேதி தனது இரு மகள்களுடன் எங்கோ மாயமாகிவிட்டார் அவரது செல்போன் “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டுள்ளது இது குறித்து கணவர் செல்வமணி பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
செல்போன் பேசியதை கண்டித்த கணவர்… 2 குழந்தைகளுடன் மனைவி திடீர் மாயம்..!
