கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம் பகுதியில் உள்ள மலைபகுதி மற்றும் வனப்பகுதிகளில் காவல்துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் வனத்துறையினருடன் இணைந்து தீவிர கூட்டு சோதனை மேற்கொண்டனர். இதில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயக்கன்பாளையம் பாலமலை மலை பகுதியில் உள்ள குஞ்சூர்பதி கிராமத்தில் வசித்து வரும் நஞ்சன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர்களது வீட்டிற்கு பின்னால் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்த நஞ்சன் (50) அவரது மனைவி மலர்கொடி (வயது45) மகன் அருண்குமார் (வயது 25)ஆகியோரை கைது செய்து, அவர்கள் வளர்த்து வந்த 6.400 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா செடிகளை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.