கோவை அருகே உள்ள சூலூர் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 30) இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன் (யு.டி.எஸ்) என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினார்.இங்கு முதலீடு செய்தால் மாதந்தோறும் கூடுதல் வட்டி கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது .இதை நம்பி கோவை மாவட்டம் அல்லாமல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கேரளா, புதுச்சேரியை சேர்ந்த பொதுமக்கள் முதலீடு செய்தனர் .அவர்களுக்கு ஒரு சில மாதங்கள் மட்டுமே வட்டி கொடுக்கப்பட்டது . பின்னர் கொடுக்கப்படவில்லை இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் ரமேஷ் மொத்தம் 76 ஆயிரத்து 597 பேரிடம் ரூ.1300 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேசை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் விசாரிக்க தனி பிரிவு தொடங்கப்பட்டது. இதற்காக துணை போலி சூப்பரண்டு முருகானந்தம் மேற்பார்வையில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ரமேசின் தந்தை கோவிந்தராஜ் ( வயது 66) தாயார் லட்சுமி ( வயது 56 )ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அது போன்று இந்த நிறுவனத்துக்கு ஏராளமான பொதுமக்களை முதலீடு செய்ய ஆள் சேர்த்து விட்ட கரூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஜஸ்டின் பிரபாகர் ( வயது 46) என்பவரும் கைது செய்யப்பட்டார். பின்னல் போலீசார் அந்த 3பேரையும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- யூ டி எஸ் நிறுவன மோசடியில் ஏராளமானவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது .எனவே அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் இவர் அவர்கள் கூறினார்கள்..
ரூ.1300 மோசடி வழக்கில் கணவன், மனைவி, அரசு பள்ளி ஆசிரியர் கைது..!
