காட்பாடி ரயில் நிலையத்தில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளை அடித்த பிரபல கேடி கைது….

ரயில் பயணிகளே ரயில் நிலையங்களில் கொள்ளை அதிகம். கர்நாடக மாநிலம் பெங்களூரு ராகவேந்திரா ரவுண்டானா ஜி கே குடியிருப்பத்தை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் மகன் அல்பி செரி ல் வயது 40 இவர் தனது உறவினர்களோடு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெங்களூரில் இருந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார் பிளாட்பார்ம் 2- ல் லிப்ட் அருகே பை கைகளை கீழே வைத்து விட்டு சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தார் அப்போது ஒரு மர்ம ஆசாமி அவர் வைத்திருந்த பையை தூக்கிக்கொண்டு ஓடி விட்டான் அதில்20 1/2 சவரன் தங்க நகைகள் தங்க சங்கிலிகள் தங்க மோதிரங்கள் நெக்லஸ்கள் ஆகியவை இருந்தது அவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 10 1/2 லட்சம் ஆகும் இது குறித்து காட்பாடி ரயில் நிலைய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே ஏடிஜிபி வனிதா அதிரடி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்ட் முனைவர் செந்தில்குமார் சேலம் ரயில்வே டிஎஸ்பி பெரியசாமி காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் காவலர்கள் அடங்கிய இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டன அவர்கள் துரிதமாக செயல்பட்டு பயங்கர கொள்ளையன் டி ஜார்ஜ் என்கிற சசிகுமார் வயது 32 தகப்பனார் பெயர் சாந்தரூபன் வி டி கே தெ ரு வசந்தபுரம் காட்பாடி தாலுக்கா வேலூர் மாவட்டம் கைது செய்தனர் அவனிடத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளும் மீட்கப்பட்டன இது குறித்து ரயில்வே போலீசார் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது காவல் உதவி மைய எண் 1512 மற்றும் வாட்ஸப் நம்பர்99625 00500 அந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்