மக்களுக்கு நம் மீது நம்பிக்கை உருவாகி உள்ளது. அதை தக்க வைக்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, கட்சி நிர்வாகிகளுடன் ரோப் கார் வழியாக பழநி கோவிலுக்குச் சென்று முருகனை திரிசித்தார் திருமாவளவன்.
கோவிலுக்குள் அவரை தேவஸ்தான அதிகாரிகளும், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் வரவேற்று பிரசாதங்களை வழங்கினர். தொடர்ச்சியாக, படிப்பாதை வழியாக பழநி மலையடிவாரம் வந்து, அங்கு புலிப்பாணி ஆசிரமத்துக்குச் சென்று, அங்கிருக்கும் தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவ சமாதியை வணங்கினார். பழநி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள், திருமாவளவனுக்கு ஸ்படிக மாலை அணிவித்து, போகர் படம் வழங்கினார். தரிசனம் முடிந்து புலிப்பாணி ஆசிரமத்துக்கு வெளியே வந்த திருமாவளவனிடம், தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது; அரசிடம் சொல்லி, எங்களுக்கு உதவ வேண்டும் என, மலையடிவார நடை பாதை வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அதைக் கேட்டுக் கொண்ட திருமாவளவன், ”முதல்வரிடம் பேசி உதவுகிறேன்’ என்று சொல்லி விட்டு கிளம்பினார்.