பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் நான் அல்ல – இப்தார் நோன்பில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு..!

சென்னை எழும்பூரில் சிராஜ் மஹாலில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, செல்லூர் ராஜு, அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அதிமுக கழக நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நோன்பில் கலந்து கொள்ளாத அதிமுக முக்கிய நிர்வாகிகள். முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர். சி.விஜயபாஸ்கர். கே.பி முனுசாமி. செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ரமலான் மாதம் என்பது வசந்த காலம் நோன்பை எதை நோக்கி காத்திருக்கிறது என்றால் தங்களை சுத்திகரித்துக் கொள்ளவும் தங்கள் வாழ்க்கையை புனிதி படித்துக் கொள்ளவும் இறைவனுக்கு இன்னும் நெருக்கமாக நகர்ந்து செல்வதற்கும் இந்த ரமலான் மாதம் ஒரு வாய்ப்பு. இறைவனோடு இணைந்து இருப்பதும் இறைவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து வாழ்வதும்தான் மனித வாழ்க்கை. உங்கள் நோம்பை போற்றுகிறோம், உங்கள் ஞானத் தேடல்களை மதிக்கின்றோம்.

சகோதரத்துவ பாசத்துடன் வாழ்ந்து அன்பையும், சமாதானத்தையும் பெருக்க நாங்கள் ஆசைப்படுகிறோம் என்பதை உங்களுக்கு தெரிவிக்கத்தான் இதை புரட்சித்தலைவி அம்மா பல ஆண்டுகளாக அதிமுக கழகத்தின் சார்பில் சீரும் சிறப்புமாக நடத்தி நடத்தினார்கள் அதனை நாங்கள் வழி தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதுமட்டும் இல்லை இளமை காலம் முதல் நினைவு நாள் வரை இஸ்லாமிய நண்பர்கள் பலரை தன்னுடன் வைத்திருந்தார் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தன்னுடைய நண்பன் மீது கொண்ட பாசத்தை பறைசாற்றுவிதமாக *”மேரே நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலை”* நடித்த படத்திலேயே அவர்களை காட்டியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்…. இரு பெரும் தலைவர்கள் அரசியலில் உருவாக்கப்பட்ட அரசியல் வழியில் தான் பயணம் செய்யும் நண்பனாக சகோதரனாக பாதுகாவலனாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல நான் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அண்ணாவின் கொள்கையால் கடைபிடிக்கப்பட்டு மக்களுக்கு தொண்டாற்றவே அரசியலுக்கு வந்த தொண்டன். எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட கருத்தும், நிலைப்பாடு கிடையாது ஜாதி, மத , வேறுபாடு இல்லை தமிழனாக இந்தியனாக “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற இயல்பாகவே வாழ்ந்து கொள்பவன் எல்லோருக்கும் சம நீதியும், சம பாதுகாப்பும், சம உரிமை கிடைக்க வேண்டும். எனது அரசியல் பயணம் நதியின் பயணத்தை போன்றது. நதியின் பயணத்தை போல நாட்டு மக்களுக்கு பயன் பெற ஓடிக்கொண்டிருக்கவே விரும்புகிறேன்…

என்னை நம்பாமல் கெட்டவர்கள் பல பேர் இருக்கிறார்கள் நம்பி கெட்டவர்கள் எவரும் இல்லை என எம்.ஜி.ஆர் பேச்சை மேற்கொள் காட்டி இப்தார் நோன்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.